கருவறையில் ருத்ராபிஷேகம் செய்தார்.
ஆதிகுரு சங்கராச்சாரியா சமாதி ஸ்தலுக்கு சென்றிருந்தார்
மந்தாகினி அஷ்டபத், சரஸ்வதி அஷ்டபத் ஆகியவற்றின் பணிகள் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார்
கேதார்நாத் ஆலய திட்டத்தின் தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.
இன்று கேதார்நாத் சென்றிருந்த பிரதமர் திரு நரேந்திர மோடி ஸ்ரீகேதார்நாத் ஆலயத்தில் தரிசனமும், பூஜையும் செய்தார். பாரம்பரிய பஹாடி உடை அணிந்திருந்த பிரதமர், கருவறையில் ருத்ராபிஷேகம் செய்ததுடன் நந்தி சிலை முன்னால் வழிபாடு செய்தார்.
ஆதி குரு சங்கராச்சாரியா சமாதி ஸ்தலுக்கும் சென்றிருந்த பிரதமர், மந்தாகினி அஷ்டபத், சரஸ்வதி அஷ்டபத் ஆகியவற்றின் பணிகள் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார்.
கேதார்நாத் ஆலய திட்டத்தின் தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.
உத்ராகண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி, உத்ராகண்ட் ஆளுநர் ஓய்வுபெற்ற ஜென்ரல் குர்மித் சிங் ஆகியோர் பிரதமருடன் சென்றிருந்தனர்.
கேதார்நாத் என்பது மிக முக்கியமான இந்து ஆலயங்களில் ஒன்றாகும். வழிபாட்டுக்கு உரிய சீக்கிய யாத்திரைத் தலங்களில் ஒன்றாக அறியப்படும் ஹேம்குந்த் சாஹிபும் இந்தப் பகுதியில் உள்ளது. சமய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தி எளிதாக செல்வதற்கு வழி ஏற்படுத்தும் பிரதமரின் உறுதிப்பாட்டை இங்கு மேற்கொள்ளப்படும் போக்குவரத்து தொடர்பு திட்டங்கள் காண்பிக்கின்றன.
எஸ்.சதிஸ் சர்மா