பிரிட்டனின் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரிஷி சுனக், மன்னர் 3ம் சார்லஸை சந்தித்தார். மன்னர் 3ம் சார்லஸின் ஒப்புதலை அடுத்து, முறைப்படி பிரிட்டிஷ் பிரதமராக இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக் பதவியேற்பார் என்று தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனாக்கை அந்நாட்டு மன்னர் 3ம் சார்லஸ் நியமித்தார். இங்கிலாந்தில் புதிய ஆட்சியை அமைக்குமாறு பிரதமர் ரிஷி சுனக்கிற்கு மன்னர் சார்லஸ் அழைப்பு விடுத்தார். மன்னர் 3ம் சார்லஸின் ஒப்புதலை அடுத்து பிரிட்டிஷ் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனாக் பதவியேற்றார்.
திவாஹர்