அரசு மின்னணு சந்தை இணைய தளம் தொடங்கப்பட்டதில் இருந்து ரூ.10,000 கோடிக்கு மேல் கொள்முதல் செய்துள்ள முதல் மத்திய பொதுத்துறை நிறுவனமாக இந்திய எஃகு ஆணையம் திகழ்கிறது.
கடந்த 2018-19 நிதியாண்டில் ரூ.2.7 கோடி என்ற சிறிய அளவில் கொள்முதலை தொடங்கிய இந்திய எஃகு ஆணையம் இந்த ஆண்டு கொள்முதல் மதிப்பை ரூ.10,000 கோடியாக கடந்தது.
முந்தைய நிதியாண்டில் ரூ.4,614 கோடி அளவிற்கு கொள்முதல் செய்து அரசு மின்னணு சந்தை இணைய தளத்தின் மூலம் அந்த ஆண்டு அதிகளவு கொள்முதல் செய்த மத்திய பொதுத்துறை நிறுவனமாக இந்திய எஃகு ஆணையம் இருந்தது. நடப்பு நிதியாண்டில் முந்தைய ஆண்டின் சாதனையை கடந்து இதுவரை ரூ. 5250 கோடி அளவிற்கு கொள்முதல் செய்துள்ளது.
திவாஹர்