மத்திய மின்துறை அமைச்சகம், மத்திய அரசு சார்பில் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து சிறப்பு முகாம் 2.0யை அக்டோபர் 2-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடத்தியது. நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது, அலுவலகங்களுக்கு இடையேயான கண்காணிப்பு அமைப்பை வலுப்படுத்துவது, தரம் உயர்த்தப்பட்ட ஆவண மேலாண்மை, பணியாற்றும் இடத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளுதல் ஆகியவையே இந்தத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் ஆகும்.
மத்திய மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தித்துறை அமைச்சகத்தின் செயலாளர், மற்றும் அதிகாரிகள், இந்த சிறப்பு முகாம் 2.0-ன் கீழ் வாரந்தோறும் ஆய்வு மேற்கொண்டனர்.
அமைச்சகம் மேற்கொண்ட இந்த முயற்சியின் பலனாக, நவம்பர் 2ம் தேதி வரை, 213 குறைதீர்வு மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
இதேபோல் 24ஆயிரத்து 854 கோப்புகள் அடையாளம் காணப்பட்டு களையெடுக்கப்பட்டன.
இந்தத் தூய்மைப்படுத்தும் பணியின் பலனாக, 2 ஆயிரத்து 820 சதுர அடி இடம் காலியாக்கப்பட்டது.
இந்த தூய்மை முகாம் 2.0 மொத்தம் 534 இடங்களில் மேற்கொள்ளப்பட்டது.
எஸ்.சதிஸ் சர்மா