சுற்றுலாவின் மேம்பாட்டிற்காக சீமா தரிசனத்தின் ஒரு பகுதியாக நாதாபெத் மற்றும் இதர எல்லைப் பகுதிகளை நேரில் சென்று காணுமாறு பொதுமக்களை பிரதமர் திரு நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
மத்திய சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் வடகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கான அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டியின் ட்விட்டர் பதிவிற்கு பிரதமர் பதிலளித்துள்ளதாவது:
“சீமா தரிசனம், சுற்றுலா துறைக்கு புதிய பரிமாணத்தை அளிக்கிறது. எல்லைகளில் வசிப்போரின் நெகிழ்தன்மையைப் போற்றும் வாய்ப்பை அது வழங்குகிறது.
நாதாபெத் மற்றும் இதர எல்லைப் பகுதிகளை நேரில் சென்று காணுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்…”
எஸ்.சதிஸ் சர்மா