மக்களவை சபாநாயகர் ஸ்ரீ ஓம் பிர்லா, “ விடுதலையின் அமிர்தப் பெருவிழா: ஆர்டிஐ மூலம் குடிமக்களை மையப்படுத்திய ஆட்சி” என்ற தலைப்பில் மத்திய தகவல் ஆணையத்தின் வருடாந்திர மாநாட்டை நாளை புதுதில்லி விஞ்ஞான் பவனில் தொடங்கி வைக்கிறார்.
மத்திய தகவல் ஆணையத்தின் தற்போதைய மற்றும் முன்னாள் தலைமை தகவல் ஆணையர்கள் மற்றும் தகவல் ஆணையர்கள், மாநில தகவல் ஆணையங்களின் அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆண்டு மாநாட்டிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மத்திய தகவல் ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் வருடாந்திர மாநாட்டை நடத்துகிறது. இந்த மாநாடுகள் பங்குதாரர்களுக்கு வெளிப்படைத்தன்மை, நிர்வாகம், தகவல் அறியும் உரிமை மற்றும் பிற தொடர்புடைய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க ஒரு வாய்ப்பையும் மன்றத்தையும் வழங்குவதோடு மட்டுமல்லாமல், தகவல் அறியும் உரிமையின் ஆட்சியை விரிவுபடுத்துவதற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் அளிக்கிறது. இந்த மாநாட்டில் மாநில தகவல் ஆணையங்களின் தலைமை தகவல் ஆணையர்கள் மற்றும் தகவல் ஆணையர்கள் மற்றும் பிற உயரதிகாரிகள், மத்திய பொதுத் தகவல் அதிகாரிகள் மற்றும் பொது அதிகாரிகளின் குறுக்கு பிரிவின் முதல் மேல்முறையீட்டு அதிகாரிகள் தவிர சிவில் சமூக உறுப்பினர்களும் கலந்து கொள்கின்றனர்.
எம்.பிரபாகரன்