100% மின்மயமாக்கல் இலக்கை அடைய இந்திய ரயில்வே தீவிரம்.

அகலப்பாதை இணைப்புகள் அனைத்தையும் மின்மயமாக்கும் லட்சியமிக்க இலக்கை அடைய இந்திய ரயில்வே தீவிரமாக உள்ளது. இதனால் எரிவாயு பயன்பாடு மேம்பட்டு அதற்கான செலவு குறைவதோடு, வெளிநாட்டு பரிமாற்றத்தில் பன்மடங்கு சேமிப்பும் ஏற்படும்.

நிதியாண்டு 2022-23-இல் 2022, அக்டோபர் வரை 1223 கிலோமீட்டர் வழித்தடங்களை இந்திய ரயில்வே மின்மயமாக்கியுள்ளது. இது நிதியாண்டு 2021-22-இன் இதே காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 895 கிலோமீட்டர் வழித்தடங்களின் மின்மயமாக்கல் பணிகளை விட 36.64% அதிகமாகும்.

இந்திய ரயில்வேயின் வரலாற்றில் 2021-22-இல் அதிகபட்சமாக 6,366 கிலோமீட்டர் வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டன. இதற்கு முன்னர் 2020-21-இல் 6,015 கிலோமீட்டர் வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டன.

31.10.2022 வரை, இந்திய ரயில்வேயின் 65,141 கிலோமீட்டர் அகலப்பாதை வழித்தடங்களில் 53,470 கிலோமீட்டர் வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. இது மொத்த அகலப்பாதை மின்மயமாக்கல் பணியில் 82.08% ஆகும்.

எம்.பிரபாகரன்

Leave a Reply