கடற்படை தலைமை தளபதி ஆர் ஹரி குமார் நவம்பர் 5 ம் தேதி தொடங்கி நவம்பர் 9, 2022 வரை ஜப்பானில் பயணம் மேற்கொண்டார்.
ஜப்பான் கடல்சார் தற்சார்பு பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டதன் 70-ம் ஆண்டையொட்டி யோகோசுகாவில் நடைபெற்ற சர்வதேச கடற்படை ஆய்வை அவர் பார்வையிட்டார். அப்போது ஜப்பான் பிரதமர் திரு ஃபுமியோ கிஷிடா, கடற்படை ஆய்விற்காக ஜேஎம்எஸ்டிஎஃப் கப்பலான இசுமோவில், நிகழ்ச்சியில் பங்கேற்ற கடற்படை பிரதிநிதிகளுடன் பயணம் செய்தார். இந்திய கடற்படை கப்பல்களான ஷிவாலிக் மற்றும் கமோர்டா ஆகியவையும் சர்வதேச கடற்படை ஆய்வில் பங்கேற்றன. கடற்படையின் கிழக்கு மண்டல அதிகாரி ரியர் அட்மிரல் சஞ்சய் பல்லா, ஷிவாலிக் கப்பலில் பயணம் செய்தார். இந்தியக் கடற்படையின் உள்நாட்டில் கட்டப்பட்ட இரண்டு கப்பல்கள் இந்த சர்வதேச கடற்படை ஆய்வில் பங்கேற்றன.
திவாஹர்