முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி அவரது உருவப் படத்திற்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார். மத்திய பாஜக அரசுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில் இந்திய ஒற்றுமை நடைப் பயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முன்னெடுத்துள்ளார்.
கன்னியாகுமரியில் தொடங்கி தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது மகாராஷ்டிரத்தில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நடைப்பயணத்தின் இடையே, இன்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 105வது பிறந்த நாள் என்பதால், அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.