திட்டமிடப்பட்ட தலைப்புகள் மற்றும் திட்டமிடுதல் குறித்து விவாதிக்க ஜி-20 முதன்மை அறிவியல் ஆலோசகர்கள் கலந்து கொண்ட திட்டமிடுதல் கூட்டம் ஜனவரி 20 (வெள்ளி) 2023 அன்று, இணையவழியாக நடைபெற்றது.
மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசக அலுவலகத்தின் அறிவியல் செயலாளர் டாக்டர் (திருமதி) பர்விந்தர் மைணி தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன், ஃபிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா, மெக்சிகோ, நெதர்லாந்த், ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்த், அமெரிக்கா ஆகிய நாடுகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்று இந்த முன்னெடுப்புக்கான பரஸ்பரம் நலன் சார்ந்த தலைப்புகள் குறித்து தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
எம். பிரபாகரன்