அதிமுக எடப்பாடி கே.பழனிசாமி வசமானது!-இரட்டை தலைமை முடிவுக்கு வந்தது!- உச்சநீதிமன்ற தீர்ப்பின் உண்மை நகல்.

கடந்தாண்டு (2022) ஜூலை 11 ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் எனவும், அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் (OPS) தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மற்றும் இடையீடு மனுக்கள் அனைத்தையும் இன்று (23.02.2023) உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் அதிமுகவில் இருந்து வந்த இரட்டை தலைமை குழப்பம் இன்று முடிவுக்கு வந்தது.

இந்த வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (23.02.2023) தீர்ப்பளித்தனர். அதில், கடந்தாண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு நடத்தப்பட்ட வழிமுறைகள் குறித்து ஆராயப்பட்டது. உரிய சட்டவிதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டனவா? என்பது குறித்தும் ஆராயப்பட்டன. அதன் அடிப்படையில், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கிய தீர்ப்பை உறுதி செய்யப்படுகிறது. கடந்தாண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும்.

மேலும், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக எந்த கோரிக்கையும் எங்கள் முன்பு வைக்கப்படவில்லை. எனவே, தீர்மானங்கள் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க போவதில்லை. எதிர்காலத்தில் இது தொடர்பாக வழக்கோ அல்லது தேர்தல் ஆணையத்தில் முறையீடு யாரேனும் தாக்கல் செய்தால் அப்போது அதன் மீதான நடவடிக்கைகள் சட்டப்படி தொடரும்.

அதேபோல் ஓ.பன்னீர்செல்வம் (OPS) தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள வழக்கு மீதான விசாரணை நடைபெறுவதில் எந்த பிரச்சினையும் இல்லை எனக்கூறி, ஓ.பன்னீர்செல்வம் (OPS) உள்ளிட்டோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மற்றும் இடையீடு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு நாம் பதிவு செய்துள்ளோம்.

–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Hon’ble Mr. Justice Dinesh Maheshwari.

Hon’ble Mr. Justice Hrishikesh Roy.

19400_2022_6_1501_42095_Judgement_23-Feb-2023

–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply