இஸ்ரோ விஞ்ஞானிகள் எல்.வி.எம்3-எம்3 ராக்கெட்டை விண்ணில் வெற்றிகரமாக ஏவியதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பாராட்டு.

ஜி.கே.வாசன்.

இஸ்ரோ விஞ்ஞானிகள் எல்.வி.எம்3-எம்3 ராக்கெட்டை விண்ணில் வெற்றிகரமாக ஏவியதற்கும், புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தியதற்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

இஸ்ரோ விஞ்ஞானிகள் எல்.வி.எம்3-எம்3 ராக்கெட்டை விண்ணில் வெற்றிகரமாக ஏவியதும், நிலைநிறுத்தியதும் பாராட்டுக்குரியது, வாழ்த்துக்குரியது.

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ – 36 செயற்கைக்கோள்களை எல்.வி.எம்3-எம்3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவியது.இஸ்ரோவின் தயாரிப்புகளில் மிக அதிக எடை கொண்ட ராக்கெட் இந்த எல்.வி.எம்3- எம்3 ராக்கெட் என்பது சிறப்புக்குரியது. கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரோ 36 செயற்கைக்கோள்களை

வெற்றிகரமாக விண்ணில் ஏவி, நிலைநிறுத்தியது முக்கியத்துவம் வாய்ந்தது.அதே போல இப்போதும் 36 செயற்கைக்கோள்களை எல்.வி.எம்3-எம்3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவியது விஞ்ஞானிகளின் கடின உழைப்புக்கு கிடைத்திருக்கும் வெற்றியாகும்.

விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதால் தொழில்நுட்ப ரீதியாக இந்தியாவுக்கு பயன் இருக்கும்.

பிராட்பேண்ட் இணைய சேவையை மேம்படுத்துவதற்காக செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டுள்ளன.5,805 கிலோ மொத்த எடை கொண்ட செயற்கைக்கோள்களை எல்.வி. எம்3- எம்3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவவும், புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளது.

விஞ்ஞானிகள் தொடர்ந்து மேற்கொண்டு வரும் முயற்சிகள் பயன் அடைந்து வருவதால் இந்தியாவின் புகழ் உலக அளவில் மேலும் பரவுகிறது.இந்தியாவில் இருந்து செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டு, நிலைநிறுத்தப்படுவதற்கு காரணம் விஞ்ஞானிகளின் கடுமையான உழைப்பும், அர்ப்பணிப்போடு ஆற்றி வரும் பணியும் தான். மேலும் விஞ்ஞானிகளுக்கு உறுதுணையாக இருந்து பணியாற்றிய பணியாளர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

எனவே இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டு, இந்தியாவின் புகழ் உலக அளவில் மென்மேலும் நிலைநாட்டப்பட இஸ்ரோவின் பணி தொடர்ந்து சிறந்து விளங்க த.மா.கா சார்பில் வாழ்த்துகிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply