மாஞ்சா நூல் மூலம் பட்டம் பறக்கவிட்டு அதனால் கடந்த காலங்களில் மாஞ்சா நூல் அறுத்து பலபேர் உயிரிழந்துள்ளனர். குறைந்ததாக தெரியவில்லை. தொடர்ந்து இழப்புகள் ஏற்பட்டாலும் குற்றங்கள்.
இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பொழுது போக்கிற்காகவும், விளையாட்டு போட்டிற்காகவும், பட்டம் பறக்க விடுவதில் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர். மாஞ்சா நூல் வஜ்ரம் அல்லது சவ்வரிசி கலவையில் கண்ணாடி துகள்கள் கலந்து பட்டத்தின் நூலில் தோய்த்து மாஞ்சா நூலை தயாரிக்கின்றனர். இது போட்டியின் போது எதிரிராளி பட்டத்தின் நூலை அறுப்பதற்கு மாஞ்சாநூல் பயன் படுத்தப்படுகிறது.
தற்பொழுது மாணவர்களுக்கு தேர்வு முடிந்து வீட்டில் விடுமுறையில் உள்ளனர். அவர்களில் பலபேர் பட்டம் பறக்க விடுவதில் ஆர்வம்காட்டுகின்றனர். மாஞ்சா நூலால் ஏற்படும் விபரீதம் அறியாமல் அஜாக்கிரதையாக பட்டம் பறக்க விடும்போது சாலையில் வாகனங்களில் செல்வோரின் கழுத்தில் மாட்டி அறுத்துவிடுகிறது. கடந்த காலங்களில் இதனால் பலர் உயிரிழந்துள்ளர். தற்பொழுது சென்னை, தேனாம்பேட்டையில் இருவர் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர்ந்து ஏற்படும் உயிரிழப்பால், கடுமையாக சட்டங்கள் பாய்ந்தாலும் குற்றங்கள் குறையவில்லை. மக்களிடையேயும், இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையும் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி விபத்தை தடுக்க, தக்க முயற்சியை மேற்கொண்டு, சென்னை பெருநகர மாநகராட்சியும், காவல்துறையும் விரைந்து செயல்பட வேண்டும். இனிமேல் மீண்டும் அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க வேண்டும். மீறி தவறு செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கே.பி.சுகுமார்