பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் மாதாந்திர வானொலி நிகழ்ச்சி மனதின் குரல் 100-வது அத்தியாயத்தை குறிக்கும். தேசிய மாநாட்டை குடியரசு துணைத்தலைவர் திரு ஜெக்தீப் தன்கர், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் தலைமையில் புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று தொடங்கி வைத்தார். வானொலியில் மாதந்தோறும் ஒலிபரப்பாகும் பிரதமரின் நிகழ்ச்சி இந்தியா முழுவதும் 100 கோடிக்கும் மேற்பட்டவர்களை சென்றடைந்து வெற்றிப்பெற்றதையடுத்து, இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய, குடியரசுத் துணைத்தலைவர் திரு தன்கர், அரசியல் சார்பற்ற இந்த மாதாந்திர ஒலிபரப்பு 100 அத்தியாயங்கள் என்ற சாதனையை எட்டுவதாக கூறினார். மனதின் குரல் நிகழ்ச்சி நமது நாகரீக நெறிமுறையை பிரதிபலிப்பதாக தெரிவித்தார். 2047-ம் ஆண்டில் இந்தியா தனது சுதந்திரத்தின் 100-வது ஆண்டு என்ற வலிமையான அடித்தளத்திற்கு ‘மனதின் குரல்’ வழிவகுப்பதாக கூறினார்.
பின்னர் பேசிய மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர், சர்வதேச அளவில் நிலவும் இக்கட்டான சூழ்நிலையில், இந்தியா நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது என்று தெரிவித்தார். ‘ஒரே இந்தியா’ ‘உன்னத இந்தியா’ என்ற கருப்பொருளில், மனதின் குரல் நிகழ்ச்சி உருவாக்கப்பட்டதாக கூறினார். இந்த நிகழ்ச்சியில் சாதாரண மக்களின் சாதனைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். மக்கள் தொடர்பின் அசல் ஊடகமாக வானொலி திகழ்வதால், இந்த ஊடகம் மூலம், இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
எம்.பிரபாகரன்