ஷாங்காய் கூட்டமைப்பு பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய பாதுகாப்பு அமைச்சருடன், சீன பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு.

மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்கை, சீன பாதுகாப்பு அமைச்சர் லீ ஷாங்ஃபூ புதுதில்லியில் இன்று (2023 ஏப்ரல் 27) சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களும் இந்தியா – சீன எல்லை விவகாரம் குறித்தும் இரு தரப்பு நல்லுறவுக்கான மேம்பாடு குறித்தும் வெளிப்படையாக விவாதித்தனர்.எல்லையில் அமைதி மற்றும் சமாதானத்திற்கு வித்திடுவதன் மூலமே இந்தியா – சீனா இடையேயான நல்லுறவை மேம்படுத்த முடியும் என பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்தார். மேலும் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு சார்ந்த அனைத்து விவகாரங்களுக்கும், தற்போது அமலில் உள்ள இருதரப்பு ஒப்பந்தம் மற்றும் நிலைப்பாட்டிற்கு ஏற்ற வகையில் தீர்வு காண்பது அவசியம் என்றார். அமலில் உள்ள ஒப்பந்தத்தை மீறுவது இரு தரப்பு உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மீண்டும் வலியுறுத்திய திரு ராஜ்நாத் சிங் அவ்வாறு செய்வதன் மூலம் எல்லையில் பதற்றத்தைத் தணிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply