விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுக் கூட்டம்.

விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் ஆலோசனைக்குழுக் கூட்டம் புதுதில்லியில் இன்று நடைபெற்றது. மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். இதில், விமானப் போக்குவரத்து எரிபொருள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது மேலான கருத்துக்களை தெரிவித்தனர்.

சர்வதேச விமானப் போக்குவரத்து மூலம் வெளியேறும் கரியமிலவாயு உமிழ்வை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் வலியுறுத்தி வருகிறது.  மேலும் 2050-ம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வு இல்லாத நிலையை உருவாக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு சர்வதேச விமானப் போக்குவரத்தின் கார்பன் உமிழ்வு குறைப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விமானப் போக்குவரத்துத் துறையின் கார்பன் உமிழ்வு இலக்கை அடைய, உயிரி-எரிபொருள் குறித்த தேசியக் கொள்கை 2018 உதவும் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

திவாஹர்

Leave a Reply