மத்திய பட்ஜெட் 2023-24-ல் அறிவித்தபடி, கொவிட்-19க்கான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினருக்கு விவாதத்தில் இருந்து நம்பிக்கை அளிக்கும் திட்டத்தை மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத் துறை தொடங்கியது. இத்திட்டம் மத்திய பட்ஜெட் 2023-24 தாக்கல் செய்யப்பட்ட போது, நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், கொவிட் காலத்தில் ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்தால், ஏலம் அல்லது செயல்திறன் பாதுகாப்பு தொடர்பாக பெறப்பட்ட தொகையில் 95 சதவீதத்தை அரசு மற்றும் அரசு நிறுவனங்கள் திருப்பித் தரும். இது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிவாரணத்தை அளிக்கும்”.
இது குறித்த உத்தரவை நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை, 06.02.2023 அன்று வெளியிட்டது. இது தொடர்பான இறுதி உத்தரவு, மற்றவர்களுக்கும் நிவாரணத்தை நீட்டித்தது குறித்தும், பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான வரம்புகளைத் தளர்த்தியது குறித்தும் 11.04.2023 அன்று வெளியிடப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் உரிமைக் கோருவதற்கான கடைசி நாள் 30.06.2023 ஆகும்.
எஸ்.சதிஸ் சர்மா