மகாராஷ்டிராவின் சாந்த் துக்காராம் மஹாராஜ் பால்கி மார்க்கத்தில் வெற்றிகரமாக நடப்பட்ட 1,025 ஆலமரங்களில் 85% உயிர் பிழைத்துள்ளதாக நிதின் கட்கரி கூறியுள்ளார்.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி, 2022 பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில், மகாராஷ்டிர மாநிலம்,  தேசிய நெடுஞ்சாலை 965ஜி பாரமதி-இந்தாபூர்  பிரிவில் அமைந்துள்ள சாந்த் துக்காராம் மஹாராஜ் பால்கி மார்க்கத்தில் மரம் நடும் திட்டத்தை மேற்கொண்டோம் என்று ட்வீட் செய்துள்ளார். இந்தத் திட்டத்தின் போது, 1,025 ஆலமரக்கன்றுகளை நட்டதில்,  தற்போது, 870  மரங்கள் (85%) உயிர் பிழைத்துள்ளன என்று அவர் கூறியுள்ளார்.

நடப்பட்ட  மரக்கன்றுகள் ஒவ்வொரு நாளும் வலுவான, பசுமையான, ஆரோக்கியமான வளர்ச்சியை அடைந்துள்ளன என்று திரு கட்கரி கூறியுள்ளார்.  இந்தத் திட்டம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உதவியதுடன் மட்டுமல்லாமல், சாலையில் பயணிப்பவர்களுக்கு ஒரு இனிமையான காட்சி அனுபவத்தையும் வழங்கியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

திவாஹர்

Leave a Reply