அஞ்சல் துறை செயல்பாடுகளில் அதன் சேவை சங்கங்களின் பணி முக்கியமானதாகும். இவை 1993ம் ஆண்டில் வகுக்கப்பட்ட விதிகளின்படி செயல்பட வேண்டும். இந்நிலையில், அகில இந்திய சி-பிரிவு அஞ்சல் ஊழியர்கள் தொழிற்சங்கம் மற்றும் தேசிய அஞ்சல் ஊழியர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் செயல்பாடுகளில் முறைகேடுகள் இருப்பதாகப் புகார் வந்தது.
இந்தப் புகார்கள் தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தப்பட்டது. இதில் முறைகேடுகள் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவற்றின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது 2023 ஏப்ரல் 25 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்நிலையில் சில ஊழியர் சங்கத்தினர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். அஞ்சல் துறையை தனியார்மயமாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாக பொய்யான தகவல்கள் சிலரால் பரப்பப்படுகிறது. அஞ்சலங்களை கார்ப்பரேட்மயமாக்குதல் அல்லது தனியார்மயமாக்குதலுக்கான எந்தத் திட்டமும் இல்லை என்பதை அரசு தெளிவுப்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அஞ்சலகங்கள் மூலம் டிஜிட்டல் வங்கிச் சேவைகள் உள்ளிட்டவற்றை அரசு வழங்கி வருவதுடன் அஞ்சல் கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறது.
திவாஹர்