சிந்தனை முகாம்கள் புதுமைக் கருத்துக்களை வெளிப்படுத்த அதிகம் வாய்ப்பளிக்கின்றன!- மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.

சிந்தனை முகாம்கள் புதுமைக் கருத்துக்களை வெளிப்படுத்த அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதாக மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார். ஃபரிதாபாத்தில் ஏப்ரல் 27 மற்றும் 28-ம் தேதிகளில் உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் 2 நாள் சிந்தனை முகாம் நிகழ்ச்சியை நடத்தியது.  

இதன் நிறைவு நாள் நிகழ்ச்சியில் அமைச்சர் திரு பியூஷ் கோயல் பங்கேற்று பேசுகையில், இது போன்ற சிந்தனை முகாம்கள் அடிக்கடி நடைபெற வேண்டும் என்று கூறினார். கருத்துக்களை சொல்வதில் உள்ள தயக்கத்தை தவிர்த்து சிந்தனைகளையும், யோசனைகளையும் தடையற்ற முறையில் வெளிப்படுத்த இந்த முகாம்கள் உதவும் என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக தொடக்க நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி, அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற அரசின் தொலைநோக்குப் பார்வையை முழுமையாக எட்டுவதற்கான நடைமுறைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த 2 நாள் சிந்தனை முகாமில் மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் திரு சஞ்சீவ் சோப்ரா உட்பட
100-க்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

எம்.பிரபாகரன்

Leave a Reply