ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் காவலர் பலி!-மஞ்சுவிரட்டு பாதுகாப்பு பணியில் இருந்த போது நடந்த துயரம்!-காவலரின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் நவநீதகிருஷ்ணன் (வயது 32) (பணி எண் 870) கே.புதுப்பட்டி கல்லூர் என்ற கிராமத்தில் இன்று (03.05.2023) நடைப்பெற்ற ‘மஞ்சுவிரட்டு’ பாதுகாப்பு பணியில் இருந்த போது எதிர்பாராத விதமாக ஜல்லிக்கட்டு காளை நவநீதகிருஷ்ணனை முட்டியதில் வயிற்று பகுதியில் படுகாயம் ஏற்ப்பட்டது.

அவரை உடனே ஆம்புலன்ஸ் மூலம் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொணடு சென்றனர். அங்கு அவருக்கு முதல் கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு அவரை  பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் காரைக்குடி KMC தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி காவலர் நவநீதகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழந்த காவலர் நவநீதகிருஷ்ணனுக்கு சபரி (வயது 32) என்ற மனைவியும், மிதுன் சக்கரவர்த்தி(வயது 8), கீர்த்தி வாசன்(வயது 5) என்ற மகன்களும், ஷிவானி (வயது 7) என்ற மகளும் உள்ளனர். நவநீதகிருஷ்ணனின் மனைவி சபரி மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார் (அவரது பணி எண் 1237).

மஞ்சுவிரட்டு பாதுகாப்பு பணிக்கு சென்ற காவலர் நவநீதகிருஷ்ணனின் உயிரிழப்பு அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே பணியின் போது ஜல்லிக்கட்டு காளை முட்டி உயிரிழந்த காவலர் நவநீதகிருஷ்ணன் குடும்பத்திற்கு, தமிழ்நாடு அரசு ஒரு கோடி ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும். இதற்கான உத்தரவை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடனே அறிவிக்க வேண்டும் என்று நமது யூடிஎல் மீடியா வேண்டுகோள் வைக்கிறது.

Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040. editorutlmedia@gmail.com

Leave a Reply