இந்திய விமானப்படையின் பாரம்பரிய மையத்தை சண்டிகரில் தொடங்கிவைத்த பாதுகாப்புத்துறை அமைச்சர், இது விமானப்படையின் மரபு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை எடுத்துக்காட்டுவதாக கூறினார்.

இந்திய விமானப்படையின்  பாரம்பரிய மையத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மே 8, 2023 அன்று சண்டிகரில் தொடங்கிவைத்தார். இம்மையத்தில் விமானப்படை தொடங்கப்பட்டது முதல் அதன் மிகச்சிறந்த வரலாறு மற்றும் பாரம்பரியம், கலை அம்சங்கள் ஆகியவை எடுத்துக்காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படையின் சாதனைமிக்க நடவடிக்கை, தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், நாட்டின் சேவையில் இந்திய விமானப்படை வீரர்களின் மதிப்புமிக்க  பங்களிப்பு மற்றும் தியாகங்களுக்கு அஞ்சலி செலுத்துவதாக இந்த கண்காட்சி அமைந்துள்ளதாக தெரிவித்தார். 1948-ம் ஆண்டு போர், 1961,1962,1965,1971-ம் ஆண்டில் நடைபெற்ற கோவா விடுதலைப்போர், கார்கில் போர் ஆகியவற்றில் இந்திய விமானப்படையின் பங்களிப்பை அவர் நினைவுகூர்ந்தார்.  எதிர்கால தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படும் என்று அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பஞ்சாப் ஆளுநரும், சண்டிகர்  நிர்வாகியுமான திரு பன்வாரிலால் புரோஹித், விமானப்படை தலைமைத் தளபதி ஏர்ஷிஃப் மார்ஷல் வி ஆர் சௌத்ரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply