இந்திய ரயில்வே ஏப்ரல் 2023 -ல் மாதாந்திர சரக்கு ஏற்றுமதியில் 126.46 மெட்ரிக் டன் அளவிற்கு சரக்குகளை ஏற்றியது. இது 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட 4.25 மெட்ரிக் டன், அதாவது 3.5 சதவீதம் அதிகமாகும். 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தை ஒப்பிடுகையில் 2023 ஏப்ரல் மாதத்தில் சரக்கு வருவாய் 7 சதவீதம் அதிகரித்து ரூ.13,893 கோடியாக இருந்தது. இது ஏப்ரல், 2022-ல் ரூ.13,011 கோடியாக இருந்தது.
ஏப்ரல் 2023-ல் 62.39 மெட்ரிக்டன் அளவிற்கு நிலக்கரியையும், 14.49 மெட்ரிக்டன் அளவிற்கு இரும்புத்தாதுவையும், 12.60 மெட்ரிக்டன் அளவிற்கு சிமெண்ட்டையும், 9.03 மெட்ரிக்டன் அளவிற்கு இருப்பு வைக்கப்பட்ட இதர பொருட்களையும், 6.74 மெட்ரிக்டன் பெட்டகங்களையும், 5.64 மெட்ரிக்டன் இரும்பையும், 5.11 மெட்ரிக்டன் உணவு தானியங்களையும், 4.05 மெட்ரிக்டன் கனிம எண்ணெயையும், 3.90 மெட்ரிக்டன் உரங்களையும் இந்திய ரயில்வே சரக்கு ஏற்றியுள்ளது.
எஸ்.சதிஸ் சர்மா