தமிழகத்தில் கள்ளச்சாரயம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். தமிழக அரசு கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல் .

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாரயம் குடித்து மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே டாஸ்மாக் மூலம் மது விற்பனையால் பல்லாயிர கணக்கான ஏழை, எளிய நடுத்தர குடும்பங்கள் பாதிக்கப்பட்டு சிரழிந்து வருகிறது. வளரும் இளைஞர்களும் எதிர்காலத்தையே தொலைத்துவிட்டு குடிக்கு அடிமையாகி கிடக்கின்றனர். இன்னிலையில் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே குடித்து 3 பேர் இறந்துள்ளனர். 14 பேர் எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து 3 பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.

தமிழகத்தில் டாஸ்மாக் போதாது என்று கள்ளச்சாரயம் வேறு இப்பொழுது ஆறாக ஓடுகிறது. தமிழக அரசும், காவல்துறையும் என்ன செய்துகொண்டு இருக்கிறது. மக்கள் மீது அக்கரையில்லாமல் மதுவினால் வரும் வருமானத்தையையே நோக்கமாக கொண்டு செயல்படும் தமிழக அரசு தன் நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் கள்ளச்சாராயம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். கள்ளச்சாரயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டறிந்து, அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த குடும்பத்தினருக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டும்.

உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply