ராணுவத் தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, மே 16 முதல் 17 வரையிலான எகிப்து பயணத்தைத் தொடங்கியுள்ளார். தமது பயணத்தின் போது அந்நாட்டின் மூத்த ராணுவ தலைவர்களை சந்திக்கும் அவர், இந்திய- எகிப்து பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான விஷயங்கள் பற்றி ஆலோசிப்பார். எகிப்து நாட்டின் பல்வேறு ஆயுதப்படை வளாகங்களுக்கு நேரில் செல்லவிருக்கும் ஜெனரல் மனோஜ் பாண்டே, பரஸ்பர நலன் பயக்கும் துறைகளில் கருத்துக்களைக் பரிமாறிக் கொள்வார்.
எகிப்து நாட்டின் ஆயுதப் படைகளின் தலைவர்கள், பாதுகாப்பு மற்றும் ராணுவ உற்பத்தித் துறை அமைச்சர் உள்ளிட்டோருடன் ராணுவாட தலைமை தளபதி கலந்துரையாடுவார். எகிப்திய ஆயுதப்படை செயல்பாட்டு ஆணையத்தின் தலைவருடன் விரிவான ஆலோசனைகளிலும் அவர் ஈடுபடுவார்.
ராணுவத் தலைமை தளபதியின் எகிப்து பயணம், இரு ராணுவப் படைகளுக்கு இடையேயான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதுடன், இரு நாடுகளுக்கு இடையே உள்ள கேந்திர பிரச்சனைகளில் நெருங்கிய ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பிற்கான உந்துசக்தியாகவும் அமையும்.
எம்.பிரபாகரன்