நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக இருந்த அருண் தம்புராஜ், கடலூர் மாவட்ட ஆட்சியராகவும், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த தீபக் ஜேக்கப், தஞ்சை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராகவும், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜான் வர்கீஸ் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
வணிக வரித்துறை நிர்வாகம் இணை ஆணையராக இருந்த சங்கீதா, மதுரை மாவட்ட ஆட்சியராகவும், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக கமல் கிஷோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நகராட்சி நிர்வாக இணை ஆணையராக இருந்த விஷ்ணு சந்திரன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராகவும், சென்னை குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்று வாரிய நிர்வாக இயக்குநர் ராஜ கோபால் சுங்கரா, ஈரோடு மாவட்ட ஆட்சியராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாநகராட்சி ஆணையராக இருந்த கிறிஸ்துராஜ், திருப்பூர் மாவட்ட ஆட்சியராகவும், தமிழ்நாடு பால் உற்பத்திக் கழக நிர்வாக இணை இயக்குனர் சரயு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராகவும், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக எம்.என்.பூங்கொடியும் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியராக ஆஷா அஜித், அரியலூர் மாவட்ட ஆட்சியராக ஆனிமேரி ஸ்வர்ணா, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக மெர்சி ரம்யா, நாமக்கல் மாவட்ட ஆட்சியராக உமா, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக கலைச்செல்வி மோகன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
முக்கிய குறிப்பு:
ஐஏஎஸ் அதிகாரிகளின் மாற்றம் குறித்து விரிவாக அறிய, மேற்காணும் தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள உத்தரவை பார்க்கவும்.
–Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040