எரிசக்தி தேவைகளை நிறைவேற்ற உயிரி எரிபொருள்கள் மிகப் பெரும் பங்களிப்பை ஆற்ற உள்ளது: மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சக செயலாளர்.

உயிரி எரிபொருட்களின் பங்களிப்பையும், எதிர்காலத்தில் தூய்மையான மற்றும் பசுமைமிக்க சூழலுக்கு எரிபொருட்களின் முழுமையான பயன்பாட்டை அடைவதற்கு ஜி20 நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுவதன் முக்கியத்துவம் குறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும்  இயற்கை எரிவாயு அமைச்சக செயலாளர் திரு பங்கஜ் ஜெயின் சுட்டிக்காட்டியுள்ளார். 2023 மே 15  அன்று மும்பையில்  நடைபெற்ற எரிசக்தி மாற்றப் பணிக்குழுவின் மூன்றாவது கூட்டத்திற்கு இடையே, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த சர்வதேச உயிரி எரிபொருள் கூட்டமைப்பு கருத்தரங்கில் அவர் உரையாற்றினார்.

உயிரி எரிபொருள்களிலுள்ள சாத்தியக் கூறுகள் குறித்தும், தூய்மை எரிசக்தி மாற்றத்திற்காக அதிகரித்து வரும் தேவைகள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார். தொழில்நுட்ப மேம்பாடு மூலம் பல்வகை  உயிரி எரிபொருள் ( கரும்பு, சோளம், வேளாண் கழிவு, மூங்கில் உட்பட )  வாய்ப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்தார்.  இதை அடுத்து சர்வதேச உயிரி எரிபொருள்கள் சந்தை வாய்ப்புகளை அதிகரிப்பதற்கு ஜி20 நாடுகள் மேலும் ஒத்துழைத்து செயல்பட  வேண்டும் என்று அவர் கூறினார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply