ப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை கணேமெட் ஷேக்கன், துப்பாக்கிச்சுடுதல் வீரர் குர்ஜோட் சிங் ஆகியோர் இத்தாலியில் பயிற்சி பெற மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சகத்தின் ஒலிம்பிக் செல் இயக்கம் மே-18ம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி ஒலிம்பிக் பதக்க இலக்கு திட்டத்தின் கீழ் இவர்கள் இருவரும் வெளிநாட்டு பயிற்சியாளர்களான பியரோ கேங்கா மற்றும் எனினோ ஃபால்கோ ஆகியோரிடம் இத்தாலியில் பயிற்சி பெறவுள்ளனர்.
அண்மையில் எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்ற உலக கோப்பைக்கான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் பதக்கம் வென்ற கணேமெட், தற்போது மகளிர் துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனைகளுக்கான உலக தரவரிசைப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். இவர் 11 நாட்களுக்கு இத்தாலி பயிற்சியாளர் பியரோ கேங்காவிடம் பயிற்சி பெறுவார். அதேபோல், குர்ஜோட் சிங் பத்து நாட்களுக்கு பயிற்சியாளர் எனினோ ஃபால்கோவிடம் பயிற்சி பெறுவார். இவர்கள் இருவரும் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டிக்காக தங்களை பயிற்சியில் ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர்.
இவர்கள் இருவரின் பயிற்சிக் கட்டணம், வெளிநாட்டு பயணம், தங்கும் செலவு உள்ளிட்ட அனைத்திற்கும் மத்திய அரசு சார்பில் நிதியுதவி அளிக்கப்படும்.
எம்.பிரபாகரன்