இந்தியா-இந்தோனேசியா இடையேயான இருதரப்பு கூட்டுப் பயிற்சியின் 4வது பதிப்பு சமுத்திர சக்தி-23 தென் சீனக் கடலில் நிறைவடைந்தது. மே 17 முதல் 19 வரை நடைபெற்ற கடல் பயிற்சிப் பிரிவில், ஒருங்கிணைந்த சேடக் ஹெலிகாப்டர் மற்றும் டோர்னியர் கடல்சார் ரோந்து விமானத்துடன் எ எஸ் டபிள்யூ கொர்வெட் ஐ என் எஸ் கவரத்தி போர்க்கப்பல் ஆகியவை பங்கேற்றன. இந்தோனேசிய கடற்படையின் கே ஆர் ஐ சுல்தான் இஸ்கந்தர் முடா மற்றும் ஒருங்கிணைந்த ஹெலிகாப்டர் பாந்தர் மற்றும் சி என் 235 கடல்சார் ரோந்து விமானம் ஆகியவை இதில் பங்கேற்றன. இரண்டு கடற்படைகளுக்கும் இடையேயான செயல்பாட்டை மேம்படுத்த போர்த் தந்திரங்கள், ஆயுத துப்பாக்கிச் சூடு, ஹெலிகாப்டர் செயல்பாடுகள், வான் பாதுகாப்பு மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் பயிற்சிகள் உள்ளிட்ட சிக்கலான பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கடல் பிரிவிற்கு முன், பலனளிக்கும் துறைமுக பிரிவு தொழில்முறை தொடர்புகள், அவசரநிலைக்கான தயாரிப்புப் பயிற்சிகள் மற்றும் விளையாட்டு பரிமாற்றங்கள் ஆகியவையும் இடம்பெற்றன. சமுத்ர சக்தி-23 பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தது இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான வலுவான கூட்டாண்மையை வெளிப்படுத்துவதோடு கூட்டுறவு ஈடுபாடுகள் மூலம் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான இரு கடற்படைகளின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது.
திவாஹர்