புதுதில்லியில் வரும் 26,27 ஆகிய தேதிகளில்,இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்புடன் (FICCI) இணைந்து மருந்துத் துறை ஏற்பாடு செய்யவுள்ள ‘இந்திய மருந்து மற்றும் இந்திய மருத்துவ சாதனங்கள் 2023’ தொடர்பான சர்வதேச மாநாட்டின் 8வது பதிப்பை மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் டாக்டர். மன்சுக் மாண்டவியா தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் ரசாயனம் மற்றும் உரத்துறை இணை அமைச்சர் திரு பகவந்த் குபாவும் பங்கேற்கிறார்.
மாநாட்டின் ஒரு பகுதியாக, டாக்டர். மாண்டவியா தேசிய மருத்துவ சாதனங்கள் கொள்கை, 2023 மற்றும் மருத்துவ சாதனங்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலை தொடங்கி வைப்பார். உலகின் மருந்தகம் என்று சரியாக அழைக்கப்படும் இந்திய மருந்துத் துறை, வரும் ஆண்டுகளில் உள்நாட்டுத் தேவைகளுக்காகவும், உலகளாவிய தேவைகளுக்காகவும் அதிகப் பங்களிப்பைச் செய்யும் என்று டாக்டர் மாண்டவியா நம்பிக்கை தெரிவித்திருந்தார். மேலும், மருத்துவ சாதனங்கள் துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, 2030ஆம் ஆண்டுக்குள் 50 பில்லியன் அமெரிக்க டாலராக வளரக்கூடிய சாத்தியக்கூறுகளுடன், மத்திய அமைச்சரவை சமீபத்தில் தேசிய மருத்துவ சாதனக் கொள்கை, 2023க்கு ஒப்புதல் அளித்தது.
மருத்துவ சாதனக் குழுக்களில் பொதுவான உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துதல் அல்லது நிறுவுதல் மற்றும் மருத்துவ சாதனங்களுக்கான பரிசோதனை வசதிகளை வலுப்படுத்துதல் அல்லது நிறுவுதல் ஆகியவற்றின் நோக்கத்துடன் ‘பொது வசதிகளுக்கான மருத்துவ சாதனக் குழுக்களுக்கான உதவி’ என்ற புதிய திட்டத்தையும் மத்திய அமைச்சர் தொடங்குவார். .
இந்த நிகழ்வின் போது, தொழில்துறை, நித்தி ஆயோக், மருந்துகள், சுகாதாரம், டிபிஐஐடி மற்றும் உயர்கல்வி துறைகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள்.
திவாஹர்