2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவது வரவேற்கத்தக்கது!- அஇஅதிமுக பெயரில் வி. கே.சசிகலா அறிக்கை.

வி. கே. சசிகலா.

ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்து இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. மேலும், 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதற்கு செப்டம்பர் 30ம் தேதி வரை கால நிர்ணயம் செய்துள்ளது மக்களுக்கு பயனளிக்க கூடியது. ஆனால், அதே சமயம் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை எவ்வாறு திரும்பப் பெறுவது அதற்கான வழிமுறைகள் என்ன என்பதை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள போதும், வங்கி அல்லாத மற்ற இடங்களில் குறிப்பாக டாஸ்மாக், கூட்டுறவு வங்கிகள், முத்திரைத்தாள் விற்பனை போன்றவற்றில் எந்த அளவுக்கு 2000 ரூபாய் நோட்டுகளை ஒரு நபரிடமிருந்து பெற முடியும் என்பது குறித்து எவ்வித அறிவிப்பும் வராததால், இது போன்ற இடங்களில் எல்லாம் அதிகார வர்க்கத்தினர் முறைகளில் ஈடுபட வாய்ப்புள்ளது. இதில் சரியான நடைமுறைகளை வகுக்கவில்லை என்றால், மத்திய அரசின் நோக்கமும் நிறைவேறுமா? என்பது கேள்விக்குறியாகிவிடும். எனவே முறைகேடுகளை முற்றிலும் தடுக்கும் வகையில் வங்கி அல்லாத பிற இடங்களில் 2000 ரூபாய் நோட்டுகளை பெறுவதற்கு தேவையான வழிமுறைகளை அறிவுறுத்த வேண்டுமென மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு வி.கே சசிகலா தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கையில் கழகப் பொதுச் செயலாளர் அஇஅதிமுக என்று அவர் கையெழுத்திட்டுள்ளார்.

Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 1404
0

Leave a Reply