3வது ஜி 20 சுற்றுலா கூட்டத்தை மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர், திரு ஜி. கிஷன் ரெட்டி மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர்(தனிப் பொறுப்பு), டாக்டர். ஜிதேந்திர சிங் ஆகியோர் துவக்கி வைக்கின்றனர்.

3வது ஜி20 சுற்றுலா கூட்டம் ஸ்ரீநகரில் மே 22 முதல் 24 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

ஜி20 மாநாடு ஸ்ரீநகரில் நடைபெறுவது, கடந்த 9 ஆண்டுகளில் குறிப்பாக பிரதமர் திரு நரேந்திர மோடியின் வழிகாட்டுதல்  முயற்சிகளுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள மாற்றத்தின் அறிகுறியாகும்: டாக்டர் ஜிதேந்திர சிங்

ஸ்ரீநகரில் நடைபெற உள்ள 3வது ஜி20 சுற்றுலா கூட்டத்தின் அதிகாரப்பூர்வ தொடக்க விழாவில் மத்திய அமைச்சர்கள் ஜி.கிஷன் ரெட்டி மற்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

தொடக்க விழாவைத் தொடர்ந்து, திரைப்பட சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான உத்திகளை மையமாகக் கொண்டு ‘பொருளாதார வளர்ச்சி மற்றும் கலாச்சாரப் பாதுகாப்பிற்கான திரைப்பட சுற்றுலா’ மற்றும் ‘சுற்றுச்சூழல் சுற்றுலா’ என்ற தலைப்பில் இரண்டு முக்கியப்பணி அமர்வுகள் நடைபெறும். பிரதிநிதிகள் இடையே இருதரப்பு சந்திப்புகளுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தேசிய செய்தி நிறுவனம் ஒன்றுக்கு இன்று அளித்த பேட்டியில், மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறுகையில், ஜி20 மாநாடு ஸ்ரீநகரில் நடைபெறுவது, கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி எடுத்த நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள மாற்றத்தை காட்டுகிறது.

எம்.பிரபாகரன்

Leave a Reply