ஐஎஸ்ஓ சர்வதேச தர நிர்ணய ஆணையத்தின் நுகர்வோர் கொள்கை கமிட்டியின் 44-வது ஆண்டு நிறைவு விழாவை மத்திய தொழில், வர்த்தகம், நுகர்வோர் நலன், பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தொடங்கி வைக்கிறார். இந்தக் கூட்டம் புதுதில்லியில் 23-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடைபெற உள்ளது. சர்வதேச அமைப்பான ஐஎஸ்ஓ பொதுச் செயலாளர் திரு சேடி டெய்ன்டன் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.
ஐஎஸ்ஓ சிஓபிஓஎல்சிஓ என்பது சர்வதேச தர நிர்ணய ஆணையத்தின் நுகர்வோர் கொள்கைக்கான கமிட்டியாகும். இந்தக் கமிட்டி தரத்தை நிர்ணயித்தல், பொருட்களின் தரத்தை மதிப்பீடு செய்தல் மற்றும் தரத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் சார்ந்த நுகர்வோரின் தேவைகளையும், அவர்களின் எதிர்பார்ப்புகளையும் முன்னிறுத்தும் அமைப்பாகும்.
நான்கு நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மத்திய அரசின் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள், தொழில்துறையினர், சர்வதேச பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நீடித்த எதிர்காலத்திற்கான நுகர்வோர் அதிகாரமளித்தல், நுகர்வோர் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் நுகர்வோர் நலன் சார்ந்த நடவடிக்கைகள் ஆகியவற்றை கருப்பொருளாகக் கொண்ட விவாதங்கள் நடத்தப்பட உள்ளன.
எம்.பிரபாகரன்