மகளிர் பெரும்பான்மையாக பணிபுரியும் இடங்களில் குழந்தைகளுக்கான தனிப்பிரிவை அதிகளவில் திறக்கவேண்டும்: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி.

மகளிர் பெரும்பான்மையாக பணிபுரியும் இடங்களில் குழந்தைகளுக்கான தனிப்பிரிவை அதிகளவு திறக்கவேண்டும் என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி வலியுறுத்தியுள்ளார்.  தொழிலாளர் 20-ன் ஒரு பகுதியாக திருவனந்தபுரத்தில் பிஎம்எஸ் மாநில மகளிர் மாநாட்டை அவர் தொடடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர், தொழில்நுட்ப உதவியுடன் கேரளாவில் அங்கன்வாடி மையங்கள் மேலும் நவீனமயமாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.  மாநிலம் முழுவதும் உள்ள 33 ஆயிரம் அங்கன்வாடி மையங்களில் 13 சதவீதம் அளவிற்கு கண்காணிப்பாளர் வேலை காலியாக உள்ளதாகவும், அவற்றை நிரப்ப மாநில அரசை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய, வெளியுறவு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் திரு முரளிதரன், மாநிலத்தில் பணியிடங்களில்  மாநில அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

திவாஹர்

Leave a Reply