உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அரசு முறைப் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு புறப்பட்டுச் சென்றார்.

புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாகவும், அடுத்த ஆண்டு நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று பல்வேறு நாடுகளுக்கு சென்று அழைப்பு விடுத்துக் கொண்டு இருக்கிறோம். அந்த வகையில் உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்க 9 நாட்கள் பயணமாக ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு இந்த பயணத்தை மேற்கொண்டு இருக்கிறேன். என்னுடன் தொழில் துறை அமைச்சர், அரசு உயர் அதிகாரிகள் வருகிறார்கள்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

எஸ்.திவ்யா

Leave a Reply