உத்தரப்பிரதேசத்தின் கௌதம புத்தா நகரில் மே 23 அன்று கபடி விளையாட்டுடன் கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டி 2022 தொடங்கியது .

உத்தரப்பிரதேசத்தின் கௌதம புத்தா நகரில் உள்ள எஸ்விஎஸ்பி விளையாட்டு வளாகத்தில் ஏராளமான ரசிகர்களிடையே மே 23 அன்று கபடி விளையாட்டுடன் உத்தரப்பிரதேச கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டி 2022-ன் முதல்நாள் ஆட்டம் தொடங்கியது.

போட்டி தொடங்குவதற்கு முன் அந்தப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. உத்தரப்பிரதேச பொதுப்பணித்துறை அமைச்சர் திரு பிரிஜேஷ் சிங் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டார்.

தொடக்க நாளில் நான்கு சுற்று கபடிப் போட்டிகள் நடைபெற்றன.  மகளிருக்கான முதல் லீக் போட்டியில் சௌத்ரி ரன்பீர் சிங் பல்கலைக்கழக அணி வெற்றிபெற்றது. இரண்டாவதுப் போட்டியில் சிம்லாவில் உள்ள இமாச்சலப் பிரதேசப் பல்கலைக்கழகம் வெற்றி பெற்றது.

ஆடவர் பிரிவின் முதலாவதுப் போட்டியில் தல்வாண்டி சாபோவின் குரு காசி பல்கலைக்கழக அணியும், இரண்டாவதுப் போட்டியில் கோட்டா பல்கலைக்கழக அணியும் வெற்றிபெற்றன.

இந்தப் போட்டியின் அதிகாரபூர்வ தொடக்கவிழா 2023 மே 25 அன்று நடைபெறும். 21 விளையாட்டுப் போட்டிகளில் 200 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 4000-க்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொள்வார்கள்.

Leave a Reply