ஏழை மக்களுக்கு ஆற்றல் அணுகலை வழங்குவதற்கு இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒத்துழைக்கின்றன
விரைவாக பசுமையாக மாற வேண்டும் என்று நம்பும் நண்பர்களையும் கூட்டாளிகளையும் இந்தியா எதிர்பார்க்கிறது: அமைச்சர் ஆர் கே சிங்
24 மணிநேரமும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை சாத்தியமானதாக மாற்ற சேமிப்பகத்தின் விலையைக் குறைக்க உலகளாவிய முயற்சிகள் தேவை: ஐரோப்பிய பசுமை ஒப்பந்தத்தின் நிர்வாக துணைத் தலைவர்
மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே.சிங், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐரோப்பிய பசுமை ஒப்பந்தத்தின் நிர்வாக துணைத் தலைவர் ஃபிரான்ஸ் டிம்மர்மன்சை சந்தித்துப் பேச்சு நடத்தினார். ஐரோப்பிய ஒன்றியம் – இந்தியா புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பது குறித்து விவாதம் நடைபெற்றது.
மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர், இந்தியா வளர்ந்து வருவதால், மின் தேவை வேகமாக அதிகரித்து வருவதாக வருகை தந்த ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் தெரிவித்தார். குறைந்த அளவில் கரியமில வாயு வெளிப்படுத்தும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதோடு ஆற்றல் மாற்றம் மற்றும் பருவநிலை நடவடிக்கையில் முன்னணியில் உள்ளது.
“சேமிப்புச் செலவைக் குறைக்க, ஆற்றல் சேமிப்புக்கான உற்பத்தி வசதிகளைச் சேர்க்க வேண்டும்” மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை அதிகரிக்க இந்தியா எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளை ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார். மிகவும் மேம்பட்ட சூரிய மின்கலங்கள் மற்றும் பேனல்களுக்கான உற்பத்தித் திறன் வரவிருக்கிறது என்று அவர் கூறினார். மேலும் 2030ஆம் ஆண்டு வாக்கில் மொத்த உற்பத்தி திறன் 80 ஜிகாவாட் அளவிற்கு உயரும். இது இந்தியாவின் தேவைகளை பூர்த்தி செய்து ஏற்றுமதிக்கான உபரியை வழங்கும். இது உலகின் விநியோகச் சங்கிலிப் பிரச்சினைகளைத் தீர்க்கும். 24 மணிநேரமும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை வழங்குவதற்கும், நிகர பூஜ்ஜியத்திற்கு மாறுவதற்கும் சேமிப்புத் தேவை என்று அமைச்சர் கூறினார். சேமிப்புத் திறனைச் சேர்க்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். இதில் மற்ற நாடுகளையும் ஊக்குவிப்பதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்பை அவர் நாடினார். மேலும் எரிசக்தி சேமிப்பிற்கான உற்பத்தி வசதிகளைச் சேர்ப்பதன் மூலம் சேமிப்பகத்தின் விலை குறைகிறது
எம்.பிரபாகரன்