Press-Release-Kallal-Group-27.5.2023
சென்னை மத்திய குற்றப்பிரிவு-I காவல்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கைகளின் அடிப்படையில், பணம் முறைகேடு செய்த கல்லால் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை இயக்குனரகம் சோதனை நடத்தியது.
லைக்கா நிறுவனம் தனது புகார் மனுவில் 114.27 கோடி ரூபாய் மதிப்பிலான பணத்தை கல்லால் குழுமம் மோசடி செய்ததாக தெரிவித்திருந்தது. ஆனால், அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் மோசடி பணத்தின் மதிப்பு மட்டும் ரூ.300 கோடியாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது.
மேலும், தொடர்ந்து நடத்திய விசாரணையில் பல்வேறு சட்ட விரோத சொத்துக்கள் குறித்த ஆவணங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக மேல் விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமலாக்கத் துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, விசாரணையின் ஒரு பகுதியாக கடந்த 25.05.2023 அன்று, குற்றம்சாட்டப்பட்டவரின் ரூ.25 கோடி சந்தை மதிப்புள்ள அசையா சொத்துக்களை தற்காலிகமாக அமலாக்கத் துறை முடங்கியுள்ளது. மேலும், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ. 34.7 லட்சம் ரூபாய்களை அமலாக்கத்துறை இயக்குனரகம் முடக்கியுள்ளது.
விசாரணையின் போது, கல்லால் நிறுவனத்திடம் இருந்து உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு ரூ. 1 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பணத்தை பெற்றதற்கான நியாயப்பூர்வமான காரணங்கள் எதையும் அறக்கட்டளையின் நிர்வாகிகளால் தெரிவிக்க இயலவில்லை என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
எச்சரிக்கை:
‘எதிரி என்றைக்கும் எதிரி தான்! அடிக்கடி பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியது உறவுகளும், நட்புகளுமே! அறிவாளிகளை அருகில் வைத்துக் கொள்ள வேண்டும்! அடிமைகளையும், துதிப் பாடிகளையும் தூரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்! ஏனென்றால், கும்பிடுகின்ற கையிலும் கூரிய வாள் இருக்கும்! இது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மட்டுமல்ல; அனைவருக்கும் தான்’.
–Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040