உள்நாட்டு சட்டங்களை மதிக்காத நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் ‘ட்விட்டர்’ கணக்கு முடக்கம்!

திரைப்பட நடிகரும், இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமானின் ‘ட்விட்டர்’ கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் இடும்பவனம் கார்த்திக், பாக்கியராஜன், விக்கி உள்பட மேலும் சில நிர்வாகிகளில் ‘ட்விட்டர்’ கணக்குகளும் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ‘ட்விட்டர்’ நிறுவனம் என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம்:

நீங்கள் ஒரு ட்வீட் அல்லது கணக்கு நிறுத்தப்பட்டதாகக் குறிக்கப்பட்டிருந்தால், அதன் அர்த்தம் என்ன?! அது ஏன் நடந்திருக்கலாம்? என்று நீங்கள் யோசித்துக்கொண்டிருக்கலாம். உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மில்லியன் ட்வீட்கள் வெளியிடப்படுவதால், பயனர்களின் வெளிப்பாட்டை மதிக்க வேண்டும், அதே நேரத்தில் பொருந்தக்கூடிய உள்நாட்டு சட்டங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

அமெரிக்கா உட்பட பல நாடுகளில் ட்வீட்கள் மற்றும் ட்விட்டர் கணக்கு உள்ளடக்கத்திற்குப் பொருந்தக்கூடிய சட்டங்கள் உள்ளன. எங்கள் சேவைகளை எல்லா இடங்களிலும் உள்ள மக்களுக்குக் கிடைக்கச் செய்வதற்கான எங்கள் தொடர்ச்சியான முயற்சியில், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து சரியான மற்றும் சரியான நோக்கமுள்ள கோரிக்கையைப் பெற்றால், குறிப்பிட்ட நாட்டில் குறிப்பிட்ட உள்ளடக்கத்திற்கான அணுகலை அவ்வப்போது நிறுத்த வேண்டியிருக்கும். செல்லுபடியாகும் சட்டக் கோரிக்கையை வழங்கிய குறிப்பிட்ட அதிகார வரம்பு அல்லது உள்நாட்டு சட்டங்களை மீறுவதாகக் கண்டறியப்பட்ட உள்ளடக்கம் போன்றவற்றுக்கு மட்டுமே இத்தகைய நிறுத்திவைக்கப்படும்.

கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு வெளிப்படைத் தன்மை அவசியம். மனம் திறந்த மற்றும் சுதந்திரமான தகவல் பரிமாற்றம் ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். அதுபோன்ற ஆரோக்கியமான கருத்துக்களை தான் ‘ட்விட்டர்’ பக்கத்தில் தொடர்ந்து பதிவு செய்ய வேண்டும்.

உள்நாட்டு சட்டங்களை கருத்தில் கொள்ளாமல் ‘கருத்து சுதந்திரம்’ என்கிற பெயரில், சட்டவிரோதமான பதிவுகளை வெளியிடுவதை ‘ட்விட்டர்’ நிர்வாகம் ஒருபோதும் அனுமதிக்காது.

அந்த அடிப்படையில் தான் மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040

Leave a Reply