கடந்த 9 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பெண்களுக்கு “வசதி, பாதுகாப்பு, மரியாதை” ஆகியவற்றை வழங்கியுள்ளது. எரிவாயு இணைப்புகளுக்கு உஜ்வாலா, பெண் கழிப்பறைகளுக்கான ஸ்வச்தா மற்றும் வீடுகளில் குழாய் தண்ணீருக்கான ஜல் ஜீவன் போன்ற சிந்தனையுடன் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் பெண்கள் எளிதாக வாழ உதவியது மட்டுமல்லாமல், அவர்களுக்கு சுயமரியாதையும், தன்னம்பிக்கையையும் அளித்தன.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் உத்திரபிரதேசத்தின் சம்பாலில் ஒரு கூட்டத்தில் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்தார். பிரதமர் மோடியின் திட்டங்களின் பயனாளிகள் பெரும்பாலோர் பெண்கள் தான் எனவும் அவர் கூறினார்.
கடந்த 9 ஆண்டுகளில் பொது சேவை வழங்கல் மற்றும் அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.
இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் பிரதமர் நரேந்திர மோடி பெண் சக்தியை முன்னணியில் வைத்துள்ளார் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். பாலின விகிதம் மேம்பட்டு முதல் முறையாக 1000 ஆண்களுக்கு 1020 பெண்கள் என்ற விகிதத்தை அடைந்துள்ளதாகவும், குழந்தை இறப்பு விகிதம் குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் பயன்பாடு அதிகரித்ததால், புகை இல்லாத சமையலறைகள் மூலம் கோடிக்கணக்கான பெண்களை நாள்பட்ட சுவாசக் கோளாறுகளில் இருந்து காப்பாற்றியுள்ளதாக அவர் கூறினார். ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள வீடுகள் குழாய் நீர் இணைப்புகளைப் பெறுவதால், அன்றாட பயன்பாட்டிற்காக நீண்ட தூரம் நடந்து தண்ணீர் எடுப்பதற்கு முடிவு எழுதப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
“இன்று பெண்களின் வளர்ச்சி அல்ல, ஆனால் பெண்கள் தலைமையிலான வளர்ச்சி” என்றும் மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங் கூறினார்.
எஸ்.சதிஸ் சர்மா