நல்லாட்சிக்கான தேசிய மைய பொது இயக்குநர் திரு பாரத் லால், மக்களின் தேவைகளை உணர்ந்து பதிலளிக்கும் வகையில் செயல்படும் அரசு ஊழியர்களின் பங்கை வலியுறுத்தினார்.
‘ஆசிய நூற்றாண்டு’ தெற்காசியாவிற்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறது என்று நல்லாட்சிக்கான தேசிய மைய பொது இயக்குநர் கூறினார்.
நல்லாட்சிக்கான தேசிய மையத்தின் (NCGG) முன்னாள் மாணவர்களாக தங்கள் அறிவையும் சிறந்த நடைமுறைகளையும் பரிமாறிக் கொள்ள அரசு ஊழியர்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.
நல்லாட்சிக்கான தேசிய மையம் (என்சிஜிஜி) வெளியுறவு அமைச்சகத்துடன் (எம்இஏ) இணைந்து ஏற்பாடு செய்த பங்களாதேஷின் அரசு ஊழியர்களுக்கான 2 வார 60வது திறன் மேம்பாட்டுத் திட்டம் (சிபிபி) ஜூன் 2, 2023 அன்று நிறைவடைந்தது. 1,500 அரசு ஊழியர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் கட்டமாக, 2025 ஆம் ஆண்டுக்குள் கூடுதலாக 1,800 அரசு ஊழியர்களின் திறனை மேம்படுத்துவதற்காக பங்களாதேஷ் அரசாங்கத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நல்லாட்சிக்கான தேசிய மையம் (NCGG)கையெழுத்திட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இம்மையம் ஏற்கனவே பங்களாதேஷின் அதிகாரிகள் 517 பேருக்கு பயிற்சி அளித்துள்ளது .
21 ஆம் நூற்றாண்டு ‘ஆசிய நூற்றாண்டு’ என்று அழைக்கப்படுகிறது. இது தெற்காசிய நாடுகளுக்கு தங்களை வளர்ந்த நாடுகளாக மாற்றிக் கொள்ளவும், அவர்களின் குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் வாய்ப்பளிக்கிறது. இந்த இலக்கை அடைய, பரஸ்பர கற்றலை வளர்ப்பது மற்றும் குடிமக்களை மையமாகக் கொண்ட பொதுக் கொள்கைகள் மற்றும் தொழில்நுட்பத்தைக்கைகொண்ட நல்லாட்சி ஆகியவற்றில் கவனம் செலுத்துவது முக்கிய அம்சமாகும்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் இந்திய அரசு இதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இது மற்ற வளரும் நாடுகளுக்கு அவர்களின் அரசு ஊழியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் திறன்களை வலுப்படுத்தும் முயற்சியில் உதவுகிறது. இந்தப் பணியைத் தொடர, வெளியுறவுத் துறை அமைச்சகம் (MEA) நல்லாட்சிக்கான தேசிய மையத்தை (NCGG) ‘கவனம் செலுத்தும் நிறுவனமாக’ அடையாளம் கண்டுள்ளது. இதன் விளைவாக, இம்மையத்தின் செயல்பாடுகளை கணிசமாக விரிவுபடுத்துவதோடு அளவிடுகிறது.
எஸ்.சதிஸ் சர்மா