100% நேரடிப்பயன் பரிமாற்றக் கணக்கை ஆதாருடன் இணைப்பதை (எபிபிஎஸ்) அடைய மாநிலங்கள் முகாம்களை ஏற்பாடு செய்து பயனாளிகளோடு தொடர்பில் இருக்க வேண்டும்.பணிக்கு வரும் பயனாளியிடம் ஆதார் எண்ணை வழங்குமாறு கேட்க வேண்டும் என்றாலும் அதன் அடிப்படையில் பணி மறுக்கப்பட மாட்டாது.தொழிலாளி எபிபிஎஸ்க்கு தகுதியற்றவர் என்ற காரணத்தின் அடிப்படையில் வேலை அட்டைகளை நீக்க முடியாதுமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் திட்டம், ஆதார் வாயிலாக இயக்கப்பட்ட கட்டணத்தை ஏற்கவில்லை – ஆதார் அடிப்படையிலான கட்டணப் பரிமாற்ற முறையைத் தேர்வு செய்துள்ளது.பல சமயங்களில் பயனாளிகள் வங்கிக் கணக்கு எண்ணில் அடிக்கடி மாற்றம் செய்வதாலும், சம்பந்தப்பட்ட திட்ட அலுவலர் புதிய கணக்கு எண்ணை புதுப்பிக்காததாலும், பயனாளிகள் புதிய கணக்கு பற்றிய விவரங்களை உரிய நேரத்தில் சமர்பிக்காததாலுமே, ஊதியம் செலுத்தும் பல பரிவர்த்தனைகள் (பழைய கணக்கு எண் காரணமாக) இலக்கு வங்கி கிளையால் நிராகரிக்கப்படுகின்றன.
திவாஹர்