அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில்(CSIR) -இந்திய ஒருங்கிணைந்த மருத்துவ நிறுவனம்(IIIM) இணைந்து ஒரு வாரம் ஒரு ஆய்வகம் பிரச்சாரத்தை ஏற்பாடு செய்துள்ளன
முதல் நாள் நிகழ்வாக லாவெண்டர் விழாவை டாக்டர் ஜிதேந்திர சிங் துவக்கி வைத்தார்
ஜம்முவின் பதேர்வாவில் இன்று 2 நாள் லாவெண்டர் திருவிழாவைத் தொடங்கி வைத்து மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் உரையாற்றினார். இது நம் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் தருணம்… இந்தியாவின் லாவெண்டர் தலைநகராகவும், வேளாண் ஸ்டார்ட்அப் இடமாகவும் பதேர்வா உருவெடுத்துள்ளது என்றார்.
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில்(CSIR) -இந்திய ஒருங்கிணைந்த மருத்துவ நிறுவனம் ஜம்மு(IIIM) தனது ஒரு வாரம் ஒரு ஆய்வகம் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
இந்தியாவின் ஊதா புரட்சியின் பிறப்பிடமாகவும், வேளாண் -ஸ்டார்ட்அப்களின் இலக்காகவும் பதர்வாவை டாக்டர் ஜிதேந்திர சிங் விவரித்தார்.
டாக்டர். ஜிதேந்திர சிங், இப்பகுதியில் லாவெண்டர் சாகுபடியைப் பற்றி குறிப்பிடுகையில், லாவெண்டர் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் ஆராய்ச்சியின் பல முன்மாதிரிகளுக்கான வழி என்று கூறினார்.
லாவெண்டர் சாகுபடி பல விவசாயிகளின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. பிரதமர் திரு நரேந்திர மோடி, மனதின் குரலின் 99 வது பதிப்பில், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் முயற்சிகளைப் பாராட்டியதைக் குறிப்பிட்டார். ”பல ஆண்டுகளாக பாரம்பரிய மக்காச்சோள சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தாலும், சில விவசாயிகள் வித்தியாசமாக ஏதாவது செய்ய நினைத்தனர். மலர் வளர்ப்பு, அதாவது பூ சாகுபடிக்கு மாறினர்.இன்று, இரண்டாயிரத்து ஐநூறு விவசாயிகள் இங்கு லாவெண்டர் பயிரிடுகின்றனர். மத்திய அரசின் அரோமா மிஷன் உதவியை எடுத்துரைத்த அமைச்சர், இந்த புதிய சாகுபடி விவசாயிகளின் வருவாயை வெகுவாக உயர்த்தியுள்ளது.” என்றார்.
எம்.பிரபாகரன்