தமிழகத்தில் வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மின்சார கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ளது மிகவும் கண்டிக்கதக்கது. கடந்த வருடம் வீட்டு மின்சார கட்டணத்தை உயர்த்தி மக்களை மீளா துயரத்தில் ஆழ்த்தியது.
கடந்த காலங்களில் கொரோனாவின் தாக்கத்தில் இருந்து மீண்டு வணிக நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் இயல்பு நிலைக்கு திரும்பிகொண்டு இருக்கும் இந்நிலையில் தற்பொழுது தமிழக தமிழக அரசு மின்சார கட்டணத்தை உயத்தியுள்ளது அவற்றின் முன்னேற்றத்தை மிகவும் பாதிக்கும். வணிக மற்றும் தொழில் நிறுவனங்களின் மின்சார கட்டணத்தை உயர்த்தியுள்ளதால் அன்றாட பொருள்களின் விலையும், அத்யாவாசிய பொருள்களின் விலையும் உயரும். இதனால், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மீதுதான் சுமை மேலும் ஏறும்.
தமிழக அரசு கடந்த காலங்களில் வீடுகளுக்கான மின்கட்டணத்தை உயர்த்தி மக்களை துன்பதிற்கு உள்ளாக்கியது. இன்று வணிக மற்றும் தொழில் நிறுவனங்களின் மின்சார கட்டணத்தை உயர்த்தி மறைமுகமாக மக்களை மேலும் பாதிப்பிற்குள்ளாக்கி இருக்கிறது.
இந்த மக்கள் விரோத போக்கை கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தமிழகம் முழுவதும் வருகிற 12.06.2023 திங்கள்கிழமை காலை 10.00 மணிக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாளில் மாவட்ட ஆட்சியாளரை சந்தித்து த.மா.கா. மாவட்டத் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாநில துணை அமைப்பு தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் இணைந்து மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு தமிழக அரசு உயர்த்திய மின்கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி மனு அளிக்கப்படுகிறது.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா