டேக்டிக்கல் லேன் ரேடியோ’ கொள்முதல் செய்வதற்கு ஐடெக்ஸ் நிறுவனம் மூலம் இந்திய ராணுவம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்தியாவில் உற்பத்தி என்ற உறுதிப்பாட்டின் தொடர்ச்சியாக ஐடெக்ஸ் நிறுவனம் மூலம் 2-வது கொள்முதல் ஒப்பந்தத்தில் இந்திய ராணுவம் 2023 ஜூன் 9 அன்று கையெழுத்திட்டது. பெங்களூரில் உள்ள ஆஸ்ட்ரோம் டெக் என்ற தனியார் நிறுவனத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘டேக்டிக்கல் லேன் ரேடியோ’ கொள்முதலுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் ராணுவத்தின் துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எம்வி சுசீந்திர குமார்  முன்னிலையில்  ஒப்பந்தம் கையெழுத்தானது.

‘டேக்டிக்கல் லேன் ரேடியோ’ என்பது உயர்ந்த அலைவரிசையுடன்  நவீன தொழில்நுட்பம் கொண்ட கம்பியில்லா வானொலியாகும். இதன் மூலம்  நம்பகமான, பாதுகாப்பான தகவல் பரிமாற்றம் செய்யமுடியும். இதில் விரிவான பாதுகாப்பு அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஒரே கருவியை எந்தவித தடங்கலும் இல்லாமல் 48 மணி நேரம் தொடர்ச்சியாக இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐடெக்ஸ் நிறுவனம் 2018-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது.  ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், எம்எஸ்எம்இ உள்ளிட்ட தொழில்நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், தனிநபர் கண்டுபிடிப்பாளர்கள் ஈடுபாட்டுடன் பாதுகாப்பு மற்றும் விண்வெளி தொடர்பான தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு ஊக்கம் அளிப்பது  இந்த நிறுவனத்தின் நோக்கமாகும்.

திவாஹர்

Leave a Reply