இந்தியாவுடனான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் 15 ஆப்பிரிக்க நாடுகளின் தூதர்களுடன் மத்திய வர்த்தக அமைச்சர் திரு பியூஷ் கோயல் புதுதில்லியில் நேற்று (08.06.2023) ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், ஆப்பிரிக்க நாடுகளுடன் இந்தியா பல ஆண்டுகளாக நல்ல நட்பைப் பராமரித்து வருகிறது என்று கூறினார்.
ஆப்பிரிக்க நாடுகளுடனான உறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார். இந்தியாவுடனான நல்லுறவை பராமரிப்பதில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஆப்பிரிக்க நாடுகளின் தூதர்களுக்கு அமைச்சர் பாராட்டுத் தெரிவித்தார். ஆப்பிரிக்க நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சு நடத்த இந்தியா தயாராக உள்ளது என்று திரு பியூஷ் கோயல் கூறினார்.
அல்ஜீரியா, போட்ஸ்வானா, எகிப்து, கானா, கினியா, கென்யா, மலாவி, மொசாம்பிக், மொராக்கோ, ருவாண்டா, தென்னாப்பிரிக்கா, தான்சானியா, டோகோ, உகாண்டா, ஜிம்பாப்வே ஆகிய 15 ஆப்பிரிக்க நாடுகளின் தூதர்கள், அமைச்சர்களுடனான சந்திப்பில் பங்கேற்றனர்.
திவாஹர்