கொச்சியில்நாளை ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் நடைபெறும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில்பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்.

2023 ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்தில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இந்திய கடற்படை வீரர்களுடன் யோகா பயிற்சியில் இணைகிறார்.

கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர்.ஹரி குமார்; கடற்படை நல்வாழ்வு சங்கத்தின் தலைவர் திருமதி கலா ஹரி குமார், இந்திய கடற்படை மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் பிற மூத்த அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

அக்னிவீர்கள் உள்ளிட்ட ஆயுதப்படை வீரர்கள் ஒற்றுமை மற்றும் நல்வாழ்வை தழுவி இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர். யோகா அமர்வுக்குப் பிறகு, பாதுகாப்பு அமைச்சர் கூட்டத்தில் உரையாற்றி யோகா பயிற்றுநர்களை கௌரவிக்கிறார்.

இந்நிகழ்ச்சியில்,யோகாவின் பெருங்கடல் வளையம்’ என்ற கருப்பொருளை வலியுறுத்தும் இந்திய கடற்படையின் செயல்பாடுகள் குறித்த பிரத்யேக வீடியோவை இந்திய கடற்படை வெளியிடுகிறது. அதே நேரத்தில் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய கடற்படை பிரிவுகள் நட்பு நாடுகளின் பல்வேறு துறைமுகங்களுக்கு பயணம் செய்து சர்வதேச யோகா தினம் 2023-ன் கருப்பொருளான “வசுதைவ குடும்பகம்” என்ற செய்தியை பரப்பும். 2014 ஆம் ஆண்டில் ஒரு தீர்மானத்தின் மூலம் ஜூன் 21 ஐ சர்வதேச யோகா தினமாக ஐ.நா அங்கீகரித்ததன் ஒன்பதாவது ஆண்டு இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சிக்கு பின்னர் பாதுகாப்புத்துறை அமைச்சர் கொச்சியில் உள்ள தெற்கு கடற்படை தளத்தில் ஒருங்கிணைந்த துருவ் வளாகத்தை  திறந்து வைக்கிறார். ஐ.எஸ்.சி ‘துருவ்’ உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன அதிநவீன சிமுலேட்டர்களை வழங்குகிறது, இது இந்திய கடற்படையில் நடைமுறை பயிற்சியை கணிசமாக மேம்படுத்தும்.

திவாஹர்

Leave a Reply