டேராடூனில் உள்ள இந்தியக் கப்பற்படையின் நீர்வரைவியல் துறையால் 2023 ஜூன் 21 அன்று, உலக நீர்வரைவியல் தினம் கொண்டாடப்பட்டது. “நீர்வரைவியல்-டிஜிட்டல் முறையைப் பயன்படுத்துதல்: கடலின் இரட்டை அம்சங்கள்” என்பது இந்த ஆண்டு உலக நீர்வரைவியல் தினத்தின் மையப்பொருளாகும்.
டேராடூனில் உள்ள தேசிய நீர்வரைவியல் அலுவலகம் தொடர்ச்சியான பல நடவடிக்கைகள் மூலம் உலக நீர்வரைவியல் தினத்தைக் கொண்டாடியது. பாதுகாப்பான கடல் பயணத்தை உறுதிசெய்தல், நீடிக்கவல்ல கடல்சார் மேம்பாட்டை ஊக்கப்படுத்துதல், நமது கடல்கள் மற்றும் கடற்கரைப் பகுதிகளைப் பாதுகாப்பது உள்ளிட்ட மத்திய அரசின் நீலப் பொருளாதாரத்திற்கு ஆதரவளித்தல் ஆகியவற்றில் நீர்வரைவியலின் முக்கியமான பங்களிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இவற்றின் நோக்கமாகும்.
இந்தக் கொண்டாட்டங்களின் முக்கிய அம்சமாக மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. நீர்வரைவியலின் முக்கியத்துவத்தையும், கடல் பாதுகாப்பில் அதன் தாக்கத்தையும் பற்றி மாணவர்களுக்குக் கற்பிப்பதற்கான விளக்க வீடியோக்கள் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. இந்த முயற்சிகள் நீர்வரைவியலில் புதிய தலைமுறையை ஈர்ப்பதாக இருந்தன.
திவாஹர்