நகரம் முழுவதுமான தூய்மை என்பது அனைத்தையும் உள்ளடக்கிய துப்புரவை வளர்க்கிறது; நகர்ப்புற வரைபடங்களை மாற்றியமைக்கிறது.

நீடிக்கவல்ல துப்புரவுத் தீர்வுகள் மீதான நம்பிக்கையை தூய்மை இயக்கம் அதிகரித்துள்ளது.  அதிக மக்கள்தொகை மற்றும் நகர்ப்புற விரிவாக்கம் என்பது பெருமளவிலான கழிவுப் பொருள்களை நிர்வகிப்பதில் பெரும் சவாலாக உள்ளது.  நகரம் முழுவதும் அனைத்தையும் உள்ளடக்கிய துப்புரவு என்பது வளர்ந்து வரும் நகர்ப்புற பகுதிகளில் தூய்மை சவால்களை எதிர்கொள்ள உதவுகிறது. மேலும் நகரங்களில் தீவிரமான நீடிக்கவல்ல தூய்மைப் பணிகளை மேலும் விரிவாக செயல்படுத்த நடைமுறையில் உள்ள துப்புரவுத் தொழில்நுட்பங்களையும் நல்ல நடைமுறைகளையும் கட்டமைக்கவும் இது உதவுகிறது.

திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மையைப் பரவலாக்க பெண்கள் தலைமையிலான சுயஉதவிக் குழுக்களும் திருநங்கைகளைக் கொண்ட குழுக்களும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.  தூய்மைப் பணிகளில் இவை முக்கியமானவையாக உருவாகி வருகின்றன.  ஒடிசா, கேரளா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் தூய்மைப் பணிகள் இத்தகைய குழுக்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன. சமூக அடிப்படையிலான அமைப்புகளை பிரதிநிதித்துவம் செய்யும் இத்தகைய குழுக்கள் குறைந்த செலவில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள உதவுகின்றன.  மேலும் சுயஉதவிக் குழுக்களின் உறுப்பினர்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கவும் இது உதவுகிறது.

திவாஹர்

Leave a Reply