எகிப்தில் உள்ள இந்திய சமூகத்தினருடன் பிரதமர் நரேந்திர மோதியின் கலந்துரையாடல்.

பிரதமர் திரு. நரேந்திர மோடி 24 ஜூன் 2023 அன்று எகிப்துக்கு தமது அரசு முறைப் பயணத்தின்போது கெய்ரோவில் உள்ள இந்திய சமூகத்தினருடன் கலந்துரையாடினார்.

அவர்களுடனான கலந்துரையாடலின் போது, இந்தியா-எகிப்து இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதில் இந்திய சமூகத்தினர் ஆற்றியுள்ள சிறந்த பங்களிப்பைப் பிரதமர் பாராட்டினார்.

மாணவர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் வணிகர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

திவாஹர்

Leave a Reply